நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி தெற்கு பகுதியில் அரசு உதவி பெறும் சரஸ்வதி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் இந்த ஆண்டு 15 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் பள்ளியை இடித்த காரணத்தால் இன்று அதே ஊரில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். இது அந்த பகுதியை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.