வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு
நாகூர் பண்டகசாலை தெரு பகுதியை சேர்ந்தவர் நிஷாமா, ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். வழக்கமாக அவர் வீட்டில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் யாரோ கூப்பிடுவது போல உஸ். உஸ். என்று சத்தம் கேட்டது.
வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் 5 அடி பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிஷாமா கூச்சலிட்டார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ யிடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை தாங்கள் வைத்திருந்த கருவி மூலம் லாவகமாக பிடித்தனர்.
பிடிபட்டது 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஆகும். இதைத் தொடர்ந்து அந்த பாம்பை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டு பகுதிக்குள் விட்டனர். வீட்டின் கதவில் நின்று பாம்பு படம் எடுத்து ஆடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது