நெடுந்தூர ஓட்டப்போட்டி203 பேர் பங்கேற்பு

171பார்த்தது
நெடுந்தூர ஓட்டப்போட்டி203 பேர் பங்கேற்பு
நாகை மீன்வள பல்கலைக்கழகம் எதிரே அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து உத்தமசோழபுரம் வரை ஓட்டப்போட்டி நடந்தது.

17 வயது முதல் 25 வயது வரை மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு என்று தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.
17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி. மீ. தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி. மீ. தூரமும், 17 முதல் 25 வயது வயதிற்குட்பட்ட மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கி. மீ. தூரமும் நடத்தப்பட்டது. போட்டியில் 128 ஆண்கள், 75 பெண்கள் என மொத்தம் 203 பேர் கலந்து கொண்டனர். இந்த ஓட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ. 3 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ. 2 ஆயிரமும் மற்றும் 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ. 1, 000 என மொத்தம் ரூ. 68 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.
இந்த பரிசு தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி