நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் சேகுவாரா, சரோஜா, ஜமுனா ராணி, சிவச்சந்திரன், மஞ்சுளா மூர்த்தி. விவசாயிகளான இவர்கள் வயலில் தனது ஆடுகளை மேய விட்டுள்ளனர். பின்னர் வெயிலின் காரணமாக மதிய நேரத்தில் வீட்டிற்கு சென்று உணவு அருந்திவிட்டு மாலை வயலுக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் வயலுக்குச் சென்று பார்த்தபோது தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டு 16 ஆடுகள் இறந்து கிடந்தன. அந்த ஆடுகளை நாய்கள் கடித்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.