14ம் தேதிஅண்ணா மிதிவண்டி போட்டி

800பார்த்தது
14ம் தேதிஅண்ணா மிதிவண்டி போட்டி
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானீடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப் பிரிவால், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் முன்னிட்டு, 2023ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கு எதிர்வரும் 14. 10. 2023 அன்று காலை 7. 00 மணிக்கு மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து துவங்கி கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை நடத்தப்படவுள்ளது. மேற்படி போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் (1. 1. 2010 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) 15 கி. மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவியர்கள் (1. 1. 2010 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) 10 கி. மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட (1. 1. 2008 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) மற்றும் 17 வயதிற்குட்பட்ட (1. 1. 2006 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) மாணவர்கள் 20 கி. மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட (1. 1. 2008 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) மற்றும் 17 வயதிற்குட்பட்ட (1. 1. 2006 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள்) மாணவியர்கள் 15 கி. மீ. தூரமும் கடந்திட வேண்டும். மேற்படி போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்படும்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி