நாகை மாவட்டத்தில் 14 பேர் கைது

68பார்த்தது
நாகை மாவட்டத்தில் 14 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாகர் காவாச் ஒத்திகையில் தீவிரவாதிகளாக ஊடுருவ முயன்ற 14 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். நாகப்பட்டினம் கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நாகப்பட்டினம் அடுத்த நாகூருக்கு கிழக்கே ஏழு பேரை கைது செய்தனர். இதே போல நாகூர் ஆயில் ஜெட்டியில் பைபர் படையில் வந்த இரண்டு பேர், வேளாங்கண்ணியில் இரண்டு பேர், செருதூரில் மூன்று பேர் என மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி