நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலமாக ஏற்றப்பட்டு பின்னர் கோவில்பத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு நெல் மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டு பின்னர் தேவைக்கேற்ப அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தொடர்வண்டி மூலமாக அரவைக்கு எடுத்துச் செல்லப்படும் வழக்கம் நெல் அரவைக்கு நெல் மூட்டைகள் ஏற்றப்படுவது தற்போது முடங்கியுள்ளதால் லாரிகள் அனைத்தும் நாகை தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் புத்தூர் அருகே நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்று காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற காரும் நாகூரை நோக்கிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் இரண்டு புறங்களும் கனக வாகனங்கள் குவிந்து நிற்பதால் எதிரே வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் திடீரென விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். மேலும் இது போன்ற விபத்துகள் தொடராமல் இருக்க இரு புறங்களில் குவிந்து நிற்கும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.