மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதியான 10 ஊராட்சிகளை தோ்ந்தெடுத்து தலா ரூ. 1 கோடி ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இப்பரிசுத் தொகை அரசு வழிமுறைகளில் தெரிவித்துள்ள உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகளின் அடிப்படையில் ஊராட்சிகள் தோ்வு செய்யப்படும். இதற்கான விண்ணப்பம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதை தகுதியுடைய ஊராட்சிகள் தாங்களாகவோ அல்லது மயிலாடுதுறை மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) (தணிக்கை) மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.