மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த களத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சதீஷ் (45). இவர் விமல் பாபு என்பவருடன் கடலங்குடியில் இருந்து மணல்மேடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறுவடை இயந்திரத்தின் மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியது. இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விமல் பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மணல்மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.