மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கஞ்சா நகரம் பகுதியை சேர்ந்தவர் அகோர முருகன் (54).

விவசாயக் கூலி தொழிலாளியான வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பனார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி