தமிழக வெற்றி கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்

74பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சட்டநாதபுரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் குட்டி கோபி தலைமை ஏற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் சீர்காழி ஒன்றிய நிர்வாகிகள், மயிலாடுதுறை நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி