மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள கடற்கரை பகுதி வரலாற்றுச் சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த செல்வது வழக்கம்.
அதனை ஒட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க வேண்டாம் என கடலோர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.