மயிலாடுதுறை காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் போலியான இணையதள பக்கத்தில் தங்களது சுய விபரங்களை பதிவிட்டால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படலாம் எனவும், மேலும் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணமும் பறிபோக வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.