மயிலாடுதுறையில் குரூப் 4 மற்றும் எஸ். பி. ஐ. வங்கி ஜூனியா் அசோசியேட் பணி தோ்வுக்கு வியாழக்கிழமை முதல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அலுவலகங்களில் காலியாக உள்ள 13, 000 ஜீனியா் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதேபோல குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு ஏப். 2025-ல் வெளியாகவுள்ளது.
இத்தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, தயாா் செய்யும் விதம், பாட நூல்கள் மற்றும் பாடக்குறிப்புகள் ஆகியவை குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மயிலாடுதுறை, பூம்புகாா் சாலை, பாலாஜி நகா் 2-வது தெருவில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் வாயிலாக டிச. 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிமுதல் நடைபெறவுள்ளது. தகுதியுள்ள வேலை நாடுநா்கள் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடையலாம். முன்பதிவுக்கு 9499055904 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை தொடா்பு கொள்ளலாம்.