மயிலாடுதுறையில் இருந்து தினசரி சேலம் செல்லக்கூடிய பேசஞ்சர் ரயில் இன்று முதல் குறைந்த பெட்டிகளுடன் டெமோ ரயிலாக மாற்றப்பட்ட இயக்கப்படுவதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 12 பெட்டிகளுடன் ஐபிஎம் ரயிலாக இயங்கிய போது அதிக பயணிகள் பயணிப்பதால் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் மனு அளித்திருந்த நிலையில் தற்பொழுது எட்டு பெட்டிகளுடன் மெமூ ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.