மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகார் கடற்கரையில் காவேரி சங்கமிக்கும் இடத்தில் தளச்சங்காடு நான்மதிய பெருமாள் கோவில் தீர்த்த வாரி 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.
முன்னதாக பெருமாள் பல்லக்கில் கடற்கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
அதன் பின்னர் பெருமாள் கடலில் தீர்த்தமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.