மயிலாடுதுறை: அம்மன் ஆலய தீமிதி திருவிழா

83பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சின்ன அரசூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் சக்தி கரகம் முன் செல்ல கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி