மாணவனுக்கு உதவி தொகை வழங்கிய சமூக சேவகர்

56பார்த்தது
மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி. இந்த மாணவர் தேசிய அளவில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளார். இதனிடையே மாணவனுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பெரம்பூரில் உள்ள பாரதி மோகன் அறக்கட்டளை சார்பில் நேற்று நிதி உதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக சேவகர் பாரதி மோகன் போட்டியில் வெற்றி பெற சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி