மயிலாடுதுறை அடுத்த பேச்சாவடி பகுதியைச் சேர்ந்த கணேசன், வயது முதிர்வு காரணமாக நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து அவர் உயிரிழப்பதற்கும் முன்பு தனது உடலை தான் கட்டிய திருமண மண்டபத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதற்கு கணேசனின் கடைசி மகன் எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையின் பிரேதத்தை மூத்த மகன் திருமண மண்டபத்தின் வாசலில் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கணேசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.