மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் 24 வது திவ்ய தேசமான நாடாளன் பெருமாள் எனும் திரு விக்ரம நாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக பெருமாள் ஆண்டாள் தாயாருடன் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டு சங்க புஷ்கரணி தெப்பக்குளத்தை மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.