மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் மாநிலத்திற்கு சொந்தமான ஸ்ரீ திருநிலைநாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் எனப்படும் சட்டை நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தைவான் நாட்டைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் பௌர்ணமியை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக அமைதி வேண்டி பல்வேறு கோவில்களில் வழிபாடு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என தமிழ் மொழியில் உச்சரித்து வழிபாடு செய்ததை கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் வியப்புடன் கண்டு ரசித்தனர்.