இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி மாணவி பலி

52பார்த்தது
தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணி விக்டா் ராஜ். இவரது மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி (14), பியூலா நான்சி (14). மகன் அந்தோணி விக்ரந்த் ராஜ் (12).

கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளான பியூலா ஹான்சி, பியூலா நான்சி இருவரும், பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளனா்.

இந்நிலையில், அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறவுள்ள கால்பந்து போட்டியில் பங்கேற்க இருவரும் தகுதி பெற்றிருந்தனா். இதற்காக, காட்டுச்சேரியில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்தநிலையில், காலை வீட்டிலிருந்து, விளையாட்டு மைதானத்துக்கு இருசக்கர வாகனத்தில் மூவரும் சென்றனா். அந்தோணி விக்ராந்த் ராஜ் இருசக்கர வாகனத்தை ஒட்டி சென்றுள்ளாா்.

காராம்பள்ளம் அருகே சென்றபோது, நாகையிலிருந்து மயிலாடுதுறைக்கு நோக்கி சென்ற அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூவரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். செல்லும் வழியில் பியூலா நான்சி உயிரிழந்தாா். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் அந்தோணி விக்ராந்த் ராஜ் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். விபத்து குறித்து பொறையாா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி