மயிலாடுதுறை அடுத்த தர்மபுரத்தில் ஆதீனத்துக்கு சொந்தமான அஷ்ட தச பூஜை துர்கா மகாலட்சுமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை மட்டும் அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகையான திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.