செல்வவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

57பார்த்தது
மயிலாடுதுறை புறநகர் கிராமம் ஜி. வி. எம் நகர் பகுதி சந்திப்பில் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜையில் பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி