மயிலாடுதுறை பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் இலவச கழிவறைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கழிவறைகள் சரிவர பராமரிக்கப்படாத காரணத்தால் மிகவும் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் அங்கிருந்து கழிவுகளை சாலையில் வெளியேறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.