நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல்

59பார்த்தது
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் வாசலில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக கைது செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி