மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பகுத்தறிவு மன்ற பின்புறம் உள்ள சாலையில் குப்பைகள் தினந்தோறும் குவிந்து கிடக்கின்றன.
இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினம் தோறும் எடுத்து சுத்தம் செய்து வருகின்றனர். காலை முதல் இரவு வரை அப்பகுதி வணிக வளாகங்களில் இருந்து குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இந்த குப்பைகளை கொட்டுவதற்காக குப்பை தொட்டியை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.