மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட அவையாள்புரம் சாலை மிகவும் சேதமடைந்து பள்ளங்கள் மேடுகளாக காட்சியளிக்கிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் மக்கள் சாலையை கடப்பதற்கு கூட அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபத்து நேரிடும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.