மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட அடக்கம் ஊராட்சியில் இயக்கி வரும் அரசு பள்ளி செல்லும் சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக நடப்பதற்கும் வாகனங்களில் செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.
இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அப்பகுதி விவசாய பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.