மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் செல்லும் சாலையானது காந்திஜி சாலையையும் புனுகீஸ்வரர் கோவில் வீதியையும் இணைக்கும் முக்கியமான சாலை ஆகும்.
சுமார் 250 மீட்டர் நீளமுள்ள இந்த சாலை குண்டும் குழியுமாக பள்ளத்துடன் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.