சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

76பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகார் தொகுதிக்குட்பட்ட கருவி என்று அழைக்கப்படும் கருவிலங்கு நாதபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

சாலையின் பாதி பகுதி வேலை நடைபெற்று மீதம் உள்ள குறைந்த சாலையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுமோ என்ற அச்சத்துடனே வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி