மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அங்கே உள்ள கழிப்பிடம் மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
தற்போது பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே கழிப்பிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கழிப்பிடங்கள் கட்டி தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.