மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து காலை முதல் மாலை வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு நேரத்தில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.
மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இரவிலும் தொடர்ந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.