புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

1064பார்த்தது
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்தித்த ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் , இன்று ராகு கேது பெயர்ச்சி என்பதால் நவகிரகங்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என கூறினார். மேலும் ஆன்மீக ரீதியான எதிர் கருத்துக்கள் தமிழகத்தில் அதிகமாக பரப்பப்படுவதாகவும் , தமிழகத்தில் ஒரு மத வழிபாட்டை தொடர்ந்து உதாசீனப்படுத்துவது அதிகமாக நடந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். கருத்து சுதந்திரம் பற்றி பேசக் கூடியவர்கள் , மற்றவர்கள் யாராவது தமிழக அரசை எதிர்த்து கருத்து தெரிவித்தால் அவர்களை கைது செய்கிறார்கள். அரசு கருத்து சுதந்திரத்தைப் பற்றி சிந்திப்பதில்லை என விமர்சித்தார். சனாதன தர்மம் என்பது வாழ்க்கை முறை என்றும் அதை டெங்குவை போன்று ஒழிப்போம் என தெரிவிக்கிறார்கள் ஆனால் டெங்குவை கூட அவர்களால் ஒழிக்க முடியவில்லை எனவும் , டெங்குவால் பல்வேறு அதிகாரிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். டெங்குவை ஒழிக்க முடியாதவர்கள் சனாதனத்தை அழிப்பேன் எனக்கு கூறுவது முறை கிடையாது என தெரிவித்தார். பல குடமுழுக்குகளை செய்திருப்பதாக தமிழக முதலமைச்சர் கூறி இருப்பதாகவும் , ஒரு குடமுழுக்கில் கூட பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தாமல் இருப்பதாகவும் விமர்சித்தார். தான் தஞ்சையில் படித்து தற்போது ஆளுநர் பதவியில் வளர்ந்து இருப்பதாகவும் ஆனால் தற்போது வரை டெல்டா பகுதி விவசாயிகள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். காவிரி பிரச்சனையில் அரசியலை நுழைய விடாமல் இரு மாநில விவசாயிகளின் பிரச்சனை என பார்க்க வேண்டும் எனவும் , ஆளும் கட்சி தான் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவது எப்படி நியாயமாக இருக்கும் என்றும் கூறினார். காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்டரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும் எனவும் , தமிழக முதலமைச்சர் கொள்கை கூட்டணி என கூறுகிறார். ஆனால் அனைவருக்கும் தண்ணீர் சமம் என்ற கொள்கைக்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். சென்ற காலங்களில் இருந்த முதலமைச்சர் போல் தமிழக முதல்வர் தண்ணீர் பெற்று தருவதற்கு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தற்போதும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மற்றொரு கட்சியுடன் நட்பு ஏற்படுத்துவது வெறும் ஓட்டுக்காக மட்டும் தானா தண்ணீருக்காக இல்லையா என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டிற்காக தண்ணீர் கொடுப்பதும் கொள்கைதான் எனவும் , ஆனால் தண்ணீரைக் கேட்டு பெற்று தரவில்லை என்றால் எதற்காக கூட்டணி சேர்கிறார்கள் என கேள்வியை எழுப்பினார். கூட்டணி நட்பை தமிழகத்திற்கு பயன்பெறக்கூடியதாக வைத்துக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழகத்தை சிறுமைப்படுத்தி எந்த கருத்துக்களும் தெரிவிக்கவில்லை , கோயில்களைப் பற்றி பேசுவதற்கு எல்லா இடத்திலும் பிரதமருக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை என்றும் எதனால் கோவில்களை வைத்துள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார். மற்றொரு மதத்தை சார்ந்தவர்களின் உணர்வுகளை மதித்து வாழ்த்து சொல்வதற்கு கூட முதலமைச்சரால் முடியவில்லை என்றால் யார் மதத்தை வைத்து பிரித்தாள்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி