நாகை நகராட்சியில் பொதுமக்கள் குற்றச்சாட்டு

83பார்த்தது
நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தவில்லை என அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீர்கள் கீழ்நிலை புதைவழி சாக்கடை மூலம் வெளியேற்றப்படாமல் திறந்தவெளி வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி