மயிலாடுதுறை துணைமின் நிலையம் மணக்குடி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி காரணமாக வியாழக்கிழமை (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை
தருமபுரம் ரோடு, மகாதானத் தெரு, பட்டமங்கலத் தெரு, அரசு மருத்துவமனை சாலை, ஸ்டேட் பாங்க் ரோடு, திருவிழந்தூா், சேந்தங்குடி, மணக்குடி, மன்னம்பந்தல், சேமங்கலம், வேப்பங்குளம், ஆனந்ததாண்டவபுரம், ஆத்துக்குடி, சோழசக்கரநல்லூா், நத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.