தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வாசல்களில் புதிய மண் பானையில் பொங்கல் வைத்து இயற்கை கடவுளான சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வது தான் தமிழர் வழக்கம்.
இதனை ஒட்டி மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு பகுதியில் பொங்கலுக்கு தேவையான மண்பாண்ட பொருட்கள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் பொங்கலுக்கு தேவையான மண்பாண்டப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.