புகைப்படக் கண்காட்சி திறப்பு

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கலையரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில்,
கலைஞரின் குழந்தை பருவம் முதல் இறுதி நாட்கள் வரை எடுக்கப்பட்ட சுமார் 10, 000 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் முன்னாள் முதல்வர் கலைஞர் தனது குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்கள் கலைஞரின் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் புகைப் படங்கள், கலைஞரின் சிறுவயது புகைப்படங்கள், குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர், மந்திரிகள், பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

தொடர்புடைய செய்தி