மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் எழுந்தருள தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் படையை போல டிவி பள்ளத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் பட்டினப்பிரவேச விழாவில் வீடுகள் தோறும் பூரண கும்பம் மரியாதையுடன் தீபாராதனை எடுத்து பொதுமக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.