வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமானதும் 22 ஆவது திவ்ய தேசமுமான பரிமள ரங்கநாதர் கோவிலில் பரமபதம் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
தொடர்ந்து மங்கல கிரி படி சட்டத்தில் பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.