மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் வெடி விபத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு அறிவித்த நிதி உதவி வழங்கப்பட்டது. இதனை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மையநாதன் வழங்கினார். இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.