வர்ணி வுட் ஆர்ட் என்ற மேற்கத்திய ஓவியக் கலையில் ஒரு மணி நேரத்தில் 70 வார்த்தைகள் 527 எழுத்துக்கள் கொண்ட 10 திருக்குறளை மரக்கட்டையில் சூரிய ஒளி மூலம் எரித்து வரைந்து மயிலாடுதுறையைச் சார்ந்த இளைஞர் விக்னேஷ் உலக சாதனை படைத்துள்ளார். இதனை அடுத்து இணையதளம் மூலம் இளைஞருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.