மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் "மீன் பிடிக்கும் தொட்டி" திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தின் அருகில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை பல ஆயிரக்கணக்கான தொட்டிகள் தயார் செய்து கடலில் இறக்கப்பட்டுள்ளன. அதிகப்படியான கடல் காற்றின் காரணமாக நீரோட்டத்தின் வேகம் அதிகரிக்கும் போது மீன்களும் வடக்கு அல்லது தெற்கு பகுதிகளுக்கு சென்று விடுகின்றன. ஆனால் இத்திட்டத்தின் கீழ் மீன்கள் தொட்டியில் தங்கி விடும். அதிகப்படியான மீன்கள் கிடைக்கும் என தரங்கம்பாடி மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.