மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பெட்ரோல் பங்க் அருகில் நெடுஞ்சாலை ஓரத்தில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு ஆறாய் ஓடிக் கொண்டிருக்கிறது. தண்ணீர்வயலில் குளம் போல் காட்சியளிக்கிறது. இதுபோன்று இன்னும் சில இடங்களில் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் தரங்கம்பாடி வாழ் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாயை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.