மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல்கனமழை பெய்துவருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 11) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் (டிசம்பர் 11) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.