முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன. 5-ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு செம்பனாா்கோயில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் போட்டி தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 8 கி. மீ தொலைவும், பெண்களுக்கு ஆறுபாதி பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 5 கி. மீ தொலைவும் நடத்தப்படும். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு செம்பனாா்கோயில் கலைமகள் கல்லூரியில் தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 10 கி. மீ தொலைவும், பெண்களுக்கு ஆறுபாதி பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியரகம் வரை 5 கி. மீ. தொலைவும் நடத்தப்படும். இதில், 17 வயதிற்கு மேற்பட்ட இருபால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவரல்லாதோா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்தவா்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
இப்போட்டியில் பங்கேற்க 2025 ஜனவரி 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் கொடுக்கப்படும் படிவத்தை பெற்றுக்கொண்டு பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை தொடா்பு கொள்ளவும். தொலைபேசி எண். 7401703459/ 04634 - 240050 என தெரிவித்துள்ளாா்.