மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் ஒளிலாயம் 18 சித்தர்கள் வீதத்தில் 2025 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு யாகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 மூலிகைகள் கொண்டு 60 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரிவார பூஜைகளுடன் மகா யாகம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.