மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாதிரி மங்கலம் கிராமத்தில் சிரசாயி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வேகம் விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக மாதிரிமங்கலம் காவிரி கரையிலிருந்து கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.