பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் கலச அபிஷேகம்

53பார்த்தது
மயிலாடுதுறை அருகே திருவிளந்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் 26 வது திவ்ய தேசமாக விளங்கும் இந்த ஆலயத்தில் நேற்று 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 1001 புனித கலசங்களில் உள்ள புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி