மயிலாடுதுறையில் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலை நடுவே அரசு பேருந்து நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். வடிவேல் பட பாணியில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் ஒன்றிணைந்து தள்ளி சென்று சாலையின் ஓரமாக நிறுத்தினர். இதனால் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.